search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு அலுவலங்களில் பாலியல் பலாத்காரம்: பெண்கள் புகார் அளிக்க இணையவழி உதவி மையம் தொடங்கப்பட்டது
    X

    அரசு அலுவலங்களில் பாலியல் பலாத்காரம்: பெண்கள் புகார் அளிக்க இணையவழி உதவி மையம் தொடங்கப்பட்டது

    மத்திய அரசு அலுவலங்களில் உயரதிகாரிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்கள் புகார் அளிப்பதற்காக ‘ஷி-பாக்ஸ்’ என்ற பெயரில் இணையவழி உதவி மையத்தை மேனகா காந்தி தொடங்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் (தெரி) தொடர்பான ஆய்வு அமைப்பின் செயல் துணைத்தலைவரும் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஆர்.கே.பச்சோரியின் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு இவர்மீது புகார் கூறப்பட்டது.

    தன் மீதான பாலியல் புகார்களை பச்சோரி மறுத்து வருகிறார். இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என முன்ஜாமின் வாங்கியுள்ளார். இதற்கிடையே, ஆர்.கே.பச்சோரி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக  டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1400 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இந்த குற்றப்பத்திரிகையில் அரசுத் தரப்பில் 23 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், தெரி நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் ஆவர். இதேபோல், மத்திய அரசு அலுவலங்களில் பணியாற்றும் பெண்களில் பலர் உயரதிகாரிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக அந்த துறையின் மிக முக்கிய உயரதிகாரியிடம் ரகசியமாக புகார் அளித்தால், அந்த பெண்களின் பலவீனத்தை சாதகப்படுத்தி விருந்தாக்கிக் கொள்ள முயற்சிக்கும் நபர்கள்தான் தலைமை பொறுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலைமையை மாற்றி, அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை முன்னர் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

    குறிப்பாக, மத்திய அரசுக்கு உட்பட்ட பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு பணியிடத்தில் நேரிடும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மத்திய மகளிர் மற்றும் கழ்ந்தைகள் நல மேம்பாட்டு மந்திரி மேனகா காந்திக்கு புகார் அனுப்பி வந்தனர்.

    இதையடுத்து, மத்திய அரசு அலுவலங்களில் உயரதிகாரிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்கள் புகார் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி கடந்த ஆண்டு தீர்மானித்தார்.

    இந்நிலையில், இன்று புதுடெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’ஷி-பாக்ஸ்’ என்ற பெயரில் இணையவழி உதவி மையத்தை மேனகா காந்தி இன்று தொடங்கி வைத்தார்.



    இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஆரம்பகட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுத்துறை தனியார் துறை அலுவலகங்களுக்கு இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும். புகார் அளிப்பவர்களுடன் உடனடியாக கலந்துரையாடல் செய்யும் வகையில் இதன் செயல்பாடுகள் அமைய வேண்டும்’ என்று கூறினார்.

    பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைக்கான முகாந்திரம் மற்றும் தாக்கம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தப் போவதாகவும் மேனகா காந்தி குறிப்பிட்டார்.

    Next Story
    ×