search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் சோனியா-ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம்: பாஜக அதிரடி வியூகம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் சோனியா-ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம்: பாஜக அதிரடி வியூகம்

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வீழ்த்த பாரதிய ஜனதா அதிரடி வியூகம் வகுத்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். இதற்கான திட்டங்களை கட்சி தலைவர் அமித்ஷாவிடம் ஒப்படைத்துள்ளார்.

    அதன்படி நாடு முழுவதும் காங்கிரசை வீழ்த்துவதற்கு பல்வேறு அதிரடி வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்படி பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டு பாரதிய ஜனதா ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் அடுத்த கட்டமாக 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மீண்டும் பலத்த அடி கொடுக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்துள்ளது. இதில் முக்கிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

    காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்களை வீழ்த்துவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளட்டவர்களை வெற்றி பெற செய்யவிடாமல் தடுப்பது, மேலும் ராகுல்காந்திக்கு பக்கபலமாக இருக்கும் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட், சசிதரூர், கமல்நாத் மற்றும் முன்னணி தலைவர்கள் தீபேந்தர் கூடா, ஆர்.பி.என்.சிங், அசோக் தன்வர், ரந்தீப் சூரஜ்வாலா, கவுரவ்கோஹே ஆகியோரையும் வீழ்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.


    இதற்காக இவர்களின் தொகுதியில் 40 முக்கிய உறுப்பினர்களை பாரதிய ஜனதா தேர்வு செய்துள்ளது. அவர்கள் தொகுதி முழுவதும் சென்று காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வார்கள்.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்குவதுடன் அந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ள காங்கிரஸ் தலைவர்கள் எதிர்மறையான செயல்பாடு குறித்தும் மக்களிடம் விளக்குவார்கள். அதாவது அந்த தலைவர்கள் வெற்றியை எப்படி எல்லாம் தடுக்க முடியுமோ அந்த வகையில் இவர்களுடைய பிரசார யுக்திகள் இருக்கும். 2019 வரை தொடர்ந்து அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

    இதேபோல நாடு முழுவதும் காங்கிரசின் முக்கிய தொகுதிகளுக்கு குறிவைத்து 10 ஆயிரம் தொண்டர்களை தயார் படுத்தி இருப்பதாக பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் ஒருவர் கூறினார்.

    கோழிகோட்டில் கடந்த ஆண்டு நடந்த பாரதிய ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைத்து முழு நேர தீவிர பணியில் ஈடுபடுத்தி எதிர்க்கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பணிகளை தொடங்கி இருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அதற்கு தகுந்த பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×