search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா: மோடி, எம்.பிக்கள் பங்கேற்பு
    X

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா: மோடி, எம்.பிக்கள் பங்கேற்பு

    நாளையுடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

    இந்த நிலையில் நாளையுடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    பிரிவு உபசார விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றம் வருகை தந்தார்.  பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் பிரிவு  உபசார விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி, எம்.பிக்கள் உள்ளிட்டோர் பிரிவு உபசார விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    நாட்டின் ஜனாதிபதியாக அவர் ஆற்றிய சேவையை பாராட்டி துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாராஜன் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பேசினர்.

    விடைபெற்று செல்லும் ஜனாதிபதிக்கு அனைத்து பாராளுமன்ற  உறுப்பினர்கள் கையொப்பம் அடங்கிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்புரை ஆற்றினார்.
    Next Story
    ×