search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார்கள்.
    புதுடெல்லி:

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார்கள்.

    பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

    போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முன்வரவில்லை என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி மொட்டை அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார். 
    Next Story
    ×