search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதிஷ்குமார் ராகுலுடன் திடீர் சந்திப்பு: தேஜஸ்வி யாதவ் மீதான புகார் குறித்து ஆலோசனை
    X

    நிதிஷ்குமார் ராகுலுடன் திடீர் சந்திப்பு: தேஜஸ்வி யாதவ் மீதான புகார் குறித்து ஆலோசனை

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார். அப்போது தேஜஸ்வி யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று
    நடக்கவுள்ள பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி கொடுக்கும் சிறப்பு விருந்தாகும்.

    இந்நிலையில், பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று டெல்லிக்கு வருகை தந்தார்.

    முன்னதாக, அவர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்தார். இருவரும் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான புகார்கள் குறித்தும், லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீது எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், இப்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×