search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.19 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு: அருண் ஜெட்லி தகவல்
    X

    வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.19 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு: அருண் ஜெட்லி தகவல்

    வெளிநாடுகளில் சட்டவிரோதமாக இந்தியர்களின் ரூ.19 ஆயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல் வெளியிட்டார்.
    புதுடெல்லி:

    அப்போது அவர், “சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு (ஐ.சி.ஐ.ஜே.) வழங்கிய தகவல்கள் அடிப்படையில் நடத்திய விசாரணையில், 700 இந்திய நபர்கள், வரி அல்லது குறைந்த வரி வரம்பை அடிப்படையாக கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும், அதன்மூலம் ரூ.11 ஆயிரத்து 10 கோடி பதுக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

    இது தொடர்பான 31 விவகாரங்களில் 72 புகார்கள், குற்றவியல் கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் 628 இந்தியர்கள் கணக்குகள் வைத்துக்கொண்டு, கணக்கில் வராத ரூ.8 ஆயிரத்து 437 கோடி பதுக்கி வைத்ததையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    இவற்றில் 162 விவகாரங்களில் ரூ.1,287 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, 84 விவகாரங்களில் கோர்ட்டுகளில் 199 கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×