search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
    X

    காஷ்மீர்: 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

    காஷ்மீரின் உரி பகுதியில் போதைப்பொருள் ஏற்றிவந்த டிரக்கை மடக்கிப் பிடித்து, அதிலிருந்து சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    இந்தியாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமைகளாகி வருகின்றனர்.

    இதன் காரணமாக போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே போலீசார் மற்றும் சிறப்பு படையினர் நடத்தும் சோதனைகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. 

    இந்நிலையில், காஷ்மீரின் உரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மிரில் இருந்து 
    சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த டிரக்கை தடுத்து நிறுத்தினர். அதிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 200 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.
    Next Story
    ×