search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா: காங்கிரஸிடம் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை பறித்த பா.ஜ.க.
    X

    கோவா: காங்கிரஸிடம் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை பறித்த பா.ஜ.க.

    கோவாவில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க. மாநில தலைவர் வினய் டெண்டுல்கர் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    பனாஜி:

    கோவாவில் உள்ள ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினராக கடந்த 2011-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் சந்தாராம் நாயக்கின் பதவி காலம் வருகிற 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 

    இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சந்தாராம் நாயக் நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பாக அக்கட்சியின் மாநில தலைவரான வினய் டெண்டுல்கர் போட்டியிட்டார்.

    இன்று நடைபெற்ற தேர்தலில் 38 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வாக்குகளை பதிவிட்டனர். இன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 வாக்குகள் பெற்று வினய் டெண்டுல்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் வாக்களித்துள்ளனர்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்தாராம் நாயக் 16 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து கோவா மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.
    Next Story
    ×