search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு தடை எதிரொலி: எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி குறைந்தது
    X

    மத்திய அரசு தடை எதிரொலி: எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி குறைந்தது

    மத்திய அரசின் தடை காரணமாக எருமை மாட்டு இறைச்சி, ஏப்ரல்-மே மாதங்களில் 4.35 சதவீதம் குறைந்துள்ளது.
    புதுடெல்லி:

    இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தடை காரணமாக எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஏப்ரல்-மே மாதங்களில் எருமை மாட்டு இறைச்சி 4.35 சதவீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    இறைச்சி மற்றும் தோல் வியாபாரிகளிடம் இருந்து உற்பத்தியை தடுப்பதாக எந்தவித புகாரும் எங்கள் அமைச்சகத்துக்கு வரவில்லை. ஆனால் புள்ளி விவரப்படி ஏப்ரல் - மே மாதங்களில் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலக்கட்டத்தில் 4.35 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி ரூ. 3566 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி ரூ 3413 கோடியாக குறைந்துள்ளது.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பதிலில் தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×