search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்டில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி
    X

    உத்தரகாண்டில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு சிசிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். பன்றி காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய வைரல் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவாத் கூறினார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் மர்ம காய்ச்சல் தாக்கியது. இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களை பரிசோதித்ததில் பன்றி காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாநில அரசு உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டன.

    பன்றி காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய வைரல் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவாத் கூறினார். அனைத்து முக்கிய ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    உயிர் பலி ஏற்பட்டிருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட கிராமங்களில் கொசுக்களை ஒழிக்க மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×