search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண் படுகாயம் - பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண் படுகாயம் - பள்ளிகளுக்கு விடுமுறை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
    ஜம்மு:

    காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிம்பர்காலி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நாய்கா எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஷா பி என்ற பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    இந்த தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோரம் வசிக்கும் மக்களில் சிலரும் இந்திய ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×