search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா உயர்மட்ட குழு இன்று கூடுகிறது
    X

    பா.ஜனதா உயர்மட்ட குழு இன்று கூடுகிறது

    துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை முடிவு செய்வது பற்றி பா.ஜனதா உயர்மட்ட குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.
    புதுடெல்லி:

    பிரணாப் முகர்ஜிக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

    தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற இரு சபைகளைச் சேர்ந்த 790 உறுப்பினர்களும் ஓட்டுப்போட்டு புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பார்கள்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் சார்பில் மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். ஆனால் ஆளும் பா.ஜனதா கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதால், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்த கூட்டத்தில் தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
    Next Story
    ×