search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம்: டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா பேட்டி
    X

    ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம்: டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா பேட்டி

    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம் என்று டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா பேட்டியில் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள போலீஸ் டி.ஜி.பி. யாக லோக்நாத் பெக்ரா பதவி ஏற்றபிறகு தான் பாவனா கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. நடிகர் திலீப்பும் போலீஸ் வலையில் சிக்கினார்.

    இந்த வழக்கில் போலீசார் நடத்தி வரும் விசாரணை தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது:-

    நடிகை கடத்தல் வழக்கில் முதல்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகள் யார் என்பதும், அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியும் என்பதை கண்டறிந்தோம். ஆனால் போலீஸ் எப்போதும் குற்றவாளிகளை விட்டுதான் பிடிக்கும். எந்த வழக்கிலும் ஆதாரம் என்பது மிகவும் முக்கியம். இந்த வழக்கிலும் வலுவான ஆதாரங்களை திரட்டுவதற்காக நாங்கள் தீவிர விசாரணை நடத்தினோம். ஆதாரங்கள் சிக்கிய பிறகு குற்றவாளியை கைது செய்தோம்.


    இந்த வழக்கில் போலீசார் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். ஓரிருநாளில் மற்ற குற்றவாளிகளும் போலீஸ் பிடியில் சிக்குவார்கள். இந்த வழக்கு தொடர்பான எல்லா தகவல்களையும் இப்போதே தெரிவிக்கமுடியாது. தேவை இல்லாத தகவல்களை வெளியிட முடியாது. அதே சமயம் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்த வழக்கில் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டதால் எங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநில கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் போலீசாரின் விசாரணையை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது கேரள போலீசார் நடிகை கடத்தல் வழக்கில் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். போலீஸ் பிடியில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது. போலீசாரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்றார்.

    Next Story
    ×