search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வீட்டில் தீ விபத்து
    X

    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வீட்டில் தீ விபத்து

    டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    புதுடெல்லி

    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் வீடு டெல்லி பிருத்விராஜ் சாலையில் உள்ளது. இன்று வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றன. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறை உதவி இல்லாமலேயே உடனடியாக தீயை அணைத்ததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுபற்றி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீவிபத்து குறித்து காலை 9.45 மணிக்கு தகவல் வந்தது. தோட்டத்தின் அருகில் பழுதுபார்க்கும் வேலை நடைபெற்றபோது, ஷாட் சர்க்யூட் காரணமாக அங்குள்ள கேபிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. போலீசார் உதவியுடன் சிறிது நேரத்திலேயே தீ அணைக்கப்பட்டது’ என்றார்.
    Next Story
    ×