search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தர பிரதேசத்தில் கனமழை: ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது-வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    உத்தர பிரதேசத்தில் கனமழை: ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது-வெள்ள அபாய எச்சரிக்கை

    உத்தர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.
    லக்னொ:

    உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் சில ஆறுகளில் நீர் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
    முக்கியமாக காக்ரா, ஷார்டா மற்றும் ரோகின் ஆகிய மூன்று ஆறுகளில் நீர் அதிக அளவில் ஓடுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பல்லியா கலன் பகுதியில் உள்ள சாரதா ஆற்றில் நீர் மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. அதே போல் எல்கின் பகுதியில் உள்ள காக்ரா ஆற்றிலும் நீர் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. மேலும் மாக்ராஜ்கானி டிரிமோக்னி காட் பகுதியில் ரோகின் ஆற்றிலும் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக மத்திய நீர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    மேலும் மாநிலத்தின் மேற்கு பகுதியில் மிதமான மழையும், கிழக்கு பகுதியில் இலேசான மழையும் பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. மொக்ரோனி பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீட்டர், லால்கன்ஜி, கசிபூர், செலம்பூர் மற்றும் ஆசமிகர் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

    Next Story
    ×