search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன தூதரை ராகுல்காந்தி சந்தித்தாரா? இல்லையா?: காங்கிரஸ் விளக்கம்
    X

    சீன தூதரை ராகுல்காந்தி சந்தித்தாரா? இல்லையா?: காங்கிரஸ் விளக்கம்

    சிக்கிம் எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழலில் சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான தகவல் குறித்து அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதர் லூ சவோஹூய்யை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

    இது தொடர்பாக சீன தூதரகத்திற்கான இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் இந்த சந்திப்பு சனிக்கிழமை(ஜூலை 8) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சந்திப்பின் போது இந்தியா-சீனா இடையேயான தற்கால உறவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

    சீனாவின் சாலை அமைக்கும் முயற்சி காரணமாக சிக்கிம் இந்திய சீன எல்லையில் இரு நாடுகளையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் இச்சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தகவலை ராகுல்காந்தியின் அலுவலகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இதனிடையே ராகுல் காந்தி சந்திப்பு தொடர்பான செய்தியை தனது இணையத்தில் இருந்து சீன தூதரம் நீக்கி விட்டது.

    இந்நிலையில், சீன தூதர் லூ சவோஹூய் உடனான ராகுல் காந்தியின் சந்திப்பை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. சீனா மற்றும் பூடான் நாட்டு தூதர்களை ராகுல்காந்தி சந்தித்ததாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    முன்னதாக சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×