search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட சடலம்: உ.பி-யில் மீண்டும் அவலம்
    X

    ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட சடலம்: உ.பி-யில் மீண்டும் அவலம்

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், சடலத்தை உறவினர்கள் ரிக்‌ஷாவில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் ஒருமுறை நடைபெற்றுள்ளது. இந்த முறை போலீஸ்சார் கேட்டும் ஆம்புலன்ஸ் கிடைக்காதது தான் மிகவும் அவலமான விஷயம்.

    போலீசாரின் தகவலின் படி சடலம் ஒன்று அட்ரா ரெயில் நிலையத்தை ஒட்டிய தண்டவாளத்தில் கிடந்தது. இறந்தவரின் பெயர் ராமசரே என்பது பின்னர் கண்டறியப்பட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனையடுத்து ரெயில்வே போலீசார் சில மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவை கேட்டுள்ளனர். ஆனால் எந்த மருத்துவமனையும் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டது.



    இதனால் உறவினர்கள், சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக ரிக்‌ஷாவில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த ரிக்‌ஷாவை ரெயில்வே போலீசார் இ-ரிக்‌ஷாவில் பின் தொடர்ந்து சென்றனர்.

    அவர்கள் சென்ற வழியில், எஸ்.பி. வீடு, டி.ஐ.ஜி அலுவலகம், கமிஷனர் வீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இருந்தும் யாரும் இந்த அவலத்தை கண்டுகொல்லவில்லை.

    இது குறித்து ரெயில்வே போலீஸ் திவகர் சிங் கூறுகையில், “ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்காததால், பிரேத பரிசோதனை செய்ய உடலை ரிக்‌ஷாவில் கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் கேட்டுக் கொண்டோம்” என்றார்.
    Next Story
    ×