search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறும் வார்த்தைகள் போதாது, பசுவுக்காக மனிதர்கள் கொல்வது நிறுத்தப்பட வேண்டும் - பிரதமருக்கு மம்தா பதிலடி
    X

    வெறும் வார்த்தைகள் போதாது, பசுவுக்காக மனிதர்கள் கொல்வது நிறுத்தப்பட வேண்டும் - பிரதமருக்கு மம்தா பதிலடி

    பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்வதை காந்தி கூட ஏற்க மாட்டார் என பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், வெறும் வார்த்தைகள் போதாது, பசுவுக்காக மனிதர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
    கொல்கத்தா:

    குஜராத் மாநிலம் சமர்பதி ஆசிரமத்தின் நூற்றாண்டு தினத்தில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி,” பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. மகாத்மா காந்தியும் அதனை ஏற்க மாட்டார். சட்டத்தை கையில் எடுக்க தனி நபருக்கு அதிகாரம் இல்லை. காந்தியையும், வினோபாவையும் விஞ்சிய பசு பாதுகாவலர்கள் யாரும் இல்லை. காந்தியின் பூமியின் பசுவின் பெயரில் வன்முறைகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று பேசினார்.

    பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ,” வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. பசுவுக்காக மனிதர்கள் கொல்லப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், பசு பாதுகாப்பு கும்பலால் சமீபத்திய கொடூர செயல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×