search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் நாளில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மோர்தார் குண்டுவீசி அத்துமீறல்
    X

    ரம்ஜான் நாளில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மோர்தார் குண்டுவீசி அத்துமீறல்

    நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடிய நாளில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மோர்தார் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
    நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடிய நாளில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மோர்தார் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    ரம்ஜான் திருவிழா நேற்று இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்திற்கு இடையிலான இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகே ராணுவ வீரர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

    அமைதியாக இருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தானியங்கி ஆயுதம் மூலமாகவும், மோர்தார் குண்டுகள் மூலமாகவும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துள்ளார் என ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 இடத்தில் போர் ஒப்பந்த விதிமுறையை பாகிஸ்தான் ராணுவம் மீறியுள்ளது. மூன்று ராணுவ வீரர்கள் உள்பட நான்கு பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×