search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறைபடியாத அரசு என்கிறபோது, வியாபம் பற்றி பேச வேண்டும்: மோடி மீது காங்கிரஸ் சாடல்
    X

    கறைபடியாத அரசு என்கிறபோது, வியாபம் பற்றி பேச வேண்டும்: மோடி மீது காங்கிரஸ் சாடல்

    மூன்று வருடங்களில் எங்களை பற்றி குறை கூறுவதற்கு ஏதுமில்லை என்று கூறும் மோடி, வியாபம் முறைகேடு பற்றி பேச வேண்டும் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
    இந்திய பிரதமர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெர்ஜினாவில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க சமூதாய உறுப்பினர்களுக்கிடையே மோடி உரையாற்றினார்.

    அப்போது ‘‘கடந்த 3 ஆண்டுகால யாரும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாத அளவிற்கு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த முறை பா.ஜனதாவிற்கு மக்கள் வாக்களித்தற்கு முக்கிய காரணம்  கடந்த காலங்களில் ஊழல் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்ததுதான்’’ என்று கூறியிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மோடி பேச்சுக்கு ரந்தீப் சுர்ஜிவாலா கண்டனம் தெரிவித்து கூறுகையில் ‘‘அமெரிக்க சுற்றுப் பயணம் மோடியின் 64-வது வெளிநாட்டு பயணம். துரதிருஷ்டவசமாக, மூலோபாயம் மற்றும் வேலைகளை திசைதிருப்புவதற்கான, காங்கிரஸ் செய்த வேலைகளை அவர்கள் செய்ததாக கூறி எதிர்க்கட்சியை இழிவுப்படுத்துவது வெளியுறவுக் கொள்ளையாக மாறிவருகிறது.

    மோடி, நீங்கள் இந்தியாவின் பிரதம மந்திரி., பா.ஜனதா அல்லது ஆர்.எஸ்.எஸ். பிரதமர் கிடையாது. விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டுவதே அவருடைய டி.என்.ஏ.-வாக மாறிவிட்டது. ஆனால், தேசத்தின் நலன், மக்களுடைய பிர்ச்சினை குறித்து பேச வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

    மோடி ஊழலை பற்றி பேசும்போது, ஏராளமான அப்பாவிகளின் உயிரை பறித்த வியாபம் ஊழலை பற்றியும், குஜராத்தில் நடைபெற்ற ஜிஎஸ்பிசி, சத்தீஸ்கரில் நடைபெற்ற பிடிஎஸ் மற்றும் ராஜஸ்தானில் நடைபெற்ற சுரங்க ஊழலைப் பற்றியும் பேச வேண்டும்.

    சகாரா டைரியில் தன்னுயை பெயர் இடம் பிடித்திருந்தது, நில மோசடியில் அனார் பட்டேல் பெயர் இடம்பிடித்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். அத்துடன் லலித் மோடி மற்றும் மல்லையா ஆகியோருக்கு வெளிநாட்டிற்கு தப்பியோடியது குறித்தும் பேச வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×