search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்: இந்திய வீரர்களுடன் வாக்குவாதம்
    X

    சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்: இந்திய வீரர்களுடன் வாக்குவாதம்

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அத்துடன் பதுங்கு குழிகளையும் அழித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்ச பிரதேசம், சிக்கிம் மாநிலம் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பையும் மீறி சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி இந்திய ராணுவத்தை மிரட்டி வருகிறது. பின்னர், இந்திய ராணுவம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் அவர்கள் எல்லைக்கு சென்று விடுவார்கள்.

    கடந்த 10 நாட்களாக சீன ராணுவம் சிக்கிம் மாநிலத்தின் டோகா லா ஜெனரல் பகுதியில் இந்திய பகுதிதிக்கும் ஊடுருவும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த இந்திய ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழையாத வண்ணம் இந்திய வீரர்கள் கைக்கோர்த்து எல்லையில் பாதுகாப்பிற்காக வரிசையாக நின்றுள்ளனர். அவர்ளுடன் சீன ராணுவம் மோதலில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது இந்த சம்பவத்தை சீனா ராணுவத்தினர் போட்டோ எடுத்துள்ளனர்.

    இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவம், லால்டன் பகுதியில் இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர். சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவது இதுமுதல் முறையல்ல. இதற்கு முன் சிக்கிம், புடான், திபெத் ஆகியவற்றின் எல்லையில் சீன ராணுவம் முன்னேறியுள்ளது.

    ஊடுருவலைத் தொடர்ந்து கடந்த 20-ந்தேதி ராணுவ அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின்பும் அங்கே பதற்ற நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    கடந்த 2008-ல் சீனா ராணுவம் இந்திய ராணுவத்தின் பதுங்கி குழிகளை தகர்த்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கைலாச மானசரோவர் புனித யாத்ரீகர்களை அனுமதிக்க சீனா ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×