search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு - சிக்கனமாக பயன்படுத்த பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
    X

    திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு - சிக்கனமாக பயன்படுத்த பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

    திருப்பதியில் உள்ள அணைகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து வருவதால் பக்தர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    திருமலை:

    திருமலை மலை மீது உள்ள புஷ்பதாரா, குமாரதாரா, கோகற்பம், பாவவிநாசம் உள்ளிட்ட 4 அணைகளில் இருந்து தான் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு விசிக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் திருமலையில் மழை பெய்யாததால், அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து 80 நாட்களுக்கு தான் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்க வாய்ப்பு உள்ளது.

    இந்த பிரச்னையை சமாளிக்க தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு உள்ளது. பக்தர்கள் தங்கும் விடுதியில் அறை எடுக்கும் போது, தண்ணீரை சிக்கமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

    மேலும், பக்தர்கள் தங்கும் அறை மற்றும் கோவில் பகுதியில் உள்ள அணைத்து தண்ணீர் குழாய்களும் நீர் வரத்து குறைவாக வருவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், திருமலையில் உள்ள பாலாஜி நகர், ஆர்.பி.டவுன் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுழற்சி முறையில் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் தண்ணீர் விடப்படும் அந்த நீரை அப்பகுதி மக்கள் சேமித்து வைத்து சிக்கமாக பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும், இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், கூறுகையில்:-

    திருப்பதியில் உள்ள கல்யாணி அணையில் இருந்து திருமலைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டோம், அதிலும் போதிய நீர் இருப்பு இல்லாததால், தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அந்த சிக்கலை தீர்க்க அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமலையில் தங்கும் விடுதிகள், கெஸ்ட் ஹவுஸ்களில்  4 மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்படுள்ளது. இந்த வாரம் இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும். விடுதி பகுதியில் தண்ணீர் விநியோக நேரம் குறித்து எழுதி ஒட்டப்படும் என்றார்.

    Next Story
    ×