search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியத்தில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
    X

    மராட்டியத்தில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்

    மராட்டியத்தில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
    மும்பை:

    மராட்டியத்தில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் தகானு பகுதியில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஷாம்காந்த். இவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை அதிகளவு மதுகுடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு தள்ளாடிய படியே வந்தார். ஒரு கட்டத்தில் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் பள்ளி வளாகத்திலேயே தடுமாறி விழுந்தார். மேலும் விழுந்த இடத்திலேயே போதையில் தூங்கிவிட்டார்.

    இந்தநிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆசிரியர் போதையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில பெற்றோர் அவரை தூக்கி பள்ளி அருகே இருந்த வீட்டில் தூங்க வைத்தனர்.

    இது குறித்து அறிந்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஷாம்காந்தை பணி இடைநீக்கம் செய்ததோடு, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற பிறகு பணிக்கு திரும்ப உத்தரவிட்டார்.

    இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘ஆசிரியர் ஷாம்காந்த் குடிபோதையில் பள்ளிக்கு வருவது இது முதல் முறை அல்ல. ஆனால் இந்த முறை அவரால் வகுப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை’ என்றார். 
    Next Story
    ×