search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் யோகி ஆதித்யாநாத்தின் 100 நாள் அரசு: வெள்ளை அறிக்கை தாக்கல்
    X

    உ.பி.யில் யோகி ஆதித்யாநாத்தின் 100 நாள் அரசு: வெள்ளை அறிக்கை தாக்கல்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த குளறுபடிகள் தொடர்பாகவும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்தின் தலைமையில் பதவியேற்ற பா.ஜ.க. அரசின் 100 நாள் சாதனையை விளக்கியும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

    அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

    இந்நிலையில், முன்னர் மாநிலத்தை ஆண்ட சமாஜ்வாதி கட்சியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாக புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாளை (25-ம் தேதி) பிற்பகல் செய்தியாளர்கள் முன்னிலையில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வெளியிடுகிறார்.


    இந்த அறிக்கையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் லஞ்சப் பண பரிமாற்றம், ஆட்சியில் நிர்வாகத்திறமை குறைவால் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.க. ஏற்ற 26-3-2017-க்கு பின்னர் கடந்த 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செய்யப்பட்ட பணிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையும் வரும் 27-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மாநில அரசின் செய்தி தொடர்பாளரும் சுகாதாரத்துறை மந்திரியுமான சித்தார்த்நாத் சிங் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    Next Story
    ×