search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 17-ந்தேதி கூடுகிறது
    X

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 17-ந்தேதி கூடுகிறது

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவை எம்.பி.க்களும் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்காக பாராளுமன்ற தலைமைச் செயலக அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து எம்.பி.க்களும் டெல்லி வர உள்ளதால் அதே சமயத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்  கூடி ஆலோசனை நடத்தியது.

    அதில் ஜூலை 17-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் எம்.பி.க்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.பி.க்கள் வினோத் கண்ணா, பல்லவிரெட்டி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். பிறகு சபை ஒத்திவைக்கப்படும். எனவே முதல் நாள் கூட்டம் நடைபெறாது.

    இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவு மற்றும் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா அனைத்தும் இந்த கால கட்டத்தில் நடைபெறும்.

    எனவே பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆளும் கட்சியினருக்கு மிகவும் கோலாகலமாக இருக்கும். என்றாலும் இந்த கூட்டத்தொடரில் மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×