search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய ரூ.500, 1000 நோட்டுகள் ரூ.24 கோடியை மாற்ற திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி கிடைக்குமா?
    X

    பழைய ரூ.500, 1000 நோட்டுகள் ரூ.24 கோடியை மாற்ற திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி கிடைக்குமா?

    மத்திய அரசு ரத்து செய்த பழைய ரூ.500,1000 நோட்டுகள் ரூ.24 கோடியை மாற்றிக் கொள்ள தேவஸ்தானத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என திருமலைத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் எதிர் பார்க்கின்றனர்.

    திருப்பதி:

    மத்திய அரசு ரத்து செய்த பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள தேவஸ்தானத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என திருமலைத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் எதிர் பார்க்கின்றனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை ரத்து செய்தது. மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஏழுமலையான் கோவில் உண்டியலில் டிசம்பர் 30-ந்தேதி வரை பக்தர்கள் செலுத்திய பழைய ரூபாய் நோட்டுகளை தேவஸ்தானம் ரிசர்வ் வங்கிடம் அளித்து மாற்றிக் கொண்டது.

    அதன்பிறகு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்ள ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. அதனால் கடந்த 6 மாதங்களில் உண்டியல் மூலம் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.24 கோடியை தேவஸ்தானம் பாதுகாத்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, 1000 நோட்டுகளை 30 நாள்களுக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் அளித்து மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.


    எனவே, இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி தேவஸ்தானத்திடம் நிலுவையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்ள தேவஸ்தான அதிகாரிகள் மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்த திட்டமிட்டுள்ளனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள மத்திய, மாநில அரசுகள் தேவஸ்தானத்துக்கு அனுமதி வழங்குமா என அதிகாரிகள் எதிர் பார்க்கின்றனர்.

    Next Story
    ×