search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. ஆளும் மராட்டிய மாநிலத்தில் கடந்த 6 மாதத்தில் 426 விவசாயிகள் தற்கொலை
    X

    பா.ஜ.க. ஆளும் மராட்டிய மாநிலத்தில் கடந்த 6 மாதத்தில் 426 விவசாயிகள் தற்கொலை

    மராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியை சுற்றி கடந்த 6 மாதத்தில் 426 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், அவுரங்காபாத் மண்டல ஆணையர் இன்று அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூன்  18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 426 விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


    இதில், பீட் மாவட்டத்தில் மிக அதிகமாக 63 பேரும், ஹிங்கோலி மாவட்டத்தில் மிக குறைவாக 23 பேரும் தற்கொலை செய்துள்ளனர். நாண்டேடில் 71ம், ஒஸ்மானாபாத்தில் 66ம், அவுரங்காபாதில் 60ம், பார்பனியில் 55ம் ஜல்னாவில் 36ம், லட்டூரில் 32 பேர் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட 426 விவசாயிகளில், 257 வழக்குகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த 55 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற 114 பேரின் மனுக்கள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×