search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2030-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 860 கோடியாக உயரும்
    X

    2030-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 860 கோடியாக உயரும்

    2030-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 860 கோடியாக உயரும். இந்தியாவில் 151 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஐ.நா. மக்கள் தொகை பிரிவு உலக மக்கள் தொகை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது உலக மக்கள் தொகை 760 கோடியாக உள்ளது. அது வருகிற 2030-ம் ஆண்டில் 860 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் வருகிற 2100-ம் ஆண்டில் உலக அளவில் மக்கள் தொகை 1120 கோடியாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தற்போது மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. இது படிப்படியாக உயர்ந்து வருகிற 2030-ம் ஆண்டில் 151 கோடியாக மாறும். 2050-ம் ஆண்டில் 166 கோடியாக அதிகரிக்கும்.

    மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு நாடான சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது. 2024-ம் ஆண்டில் அது 144 கோடியாக மாறும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் அடங்கி பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, பாகிஸ்தான், எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, உகாண்டா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலக மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் தொகை பெருக்கம் இருக்கும். மக்கள் தொகை பெருக்கம் விகிதாச்சாரம் 2017-2050ம் ஆண்டுக்கு இடையில் மேற்கண்ட அளவில் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில், அமெரிக்காவை விட நைஜீரியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×