search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு ஆதரவு: சசிகலாவும், எடப்பாடியும் சேர்ந்து எடுத்த முடிவு - தம்பித்துரை
    X

    பா.ஜனதாவுக்கு ஆதரவு: சசிகலாவும், எடப்பாடியும் சேர்ந்து எடுத்த முடிவு - தம்பித்துரை

    பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பது சசிகலாவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. அம்மா அணியின் ஆதரவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    முன்னதாக சிறையில் இருக்கும் சசிகலாவை பாராளுமன்ற துணை சபாநாயகர் சந்தித்துப் பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று காலை டெல்லியில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-



    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இது அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பாக எடுத்த முடிவு. தலைமை கழக பொறுப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளனர்.



    பொது செயலாளர் சசிகலாவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து எடுத்த முடிவு தான்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அ.தி.மு.க.வில் பிளவு இல்லை என்பது தெளிவாகிறது. கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×