search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீராகுமார் 28-ந்தேதி மனுதாக்கல் - 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு
    X

    மீராகுமார் 28-ந்தேதி மனுதாக்கல் - 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் கடைசி நாளான 28-ந்தேதி தன் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லியில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு மீராகுமார் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    மீராகுமாருக்கு நாடெங்கும் உள்ள 17 கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகியவை அந்த 17 கட்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

    காங்கிரஸ் அணியில் இருந்த பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் திடீரென பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக தன் நிலையை மாற்றிக் கொண்டது. எதிர்க்கட்சி பொது வேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    என்றாலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் மீராகுமார் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அவர் மனுதாக்கலுக்கு கடைசி நாளான 28-ந்தேதி தன் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    மீராகுமாரை முன்மொழிய 50 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வழிமொழிய 50 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேவை. அந்த குழுவில் யார்-யாரை இடம் பெற செய்யலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.



    கூட்டணி கட்சிகளுக்கு முன்மொழிவதிலும், வழி மொழிவதிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற உள்ளார். எனவே மீராகுமார் 28-ந்தேதி மனு தாக்கல் செய்யும் போது, அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று தெரிகிறது.
    Next Story
    ×