search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நான் ஏழை’ என சுவற்றில் எழுதி ஏழை மக்களை அவமானபடுத்தும் ராஜஸ்தான் அரசு
    X

    ‘நான் ஏழை’ என சுவற்றில் எழுதி ஏழை மக்களை அவமானபடுத்தும் ராஜஸ்தான் அரசு

    ராஜஸ்தான் மாநிலத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் கோதுமை வாங்குபவர்களின் வீடுகளின் சுவற்றில் ’நான் ஒரு ஏழை’எழுதி மக்களை அவமானபடுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடந்து வருகிறது. தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ளது தவுசா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள மக்களில், 70 சதவீதம் பேர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்படும் கோதுமையை வாங்குகின்றனர்.

    இந்த மாவட்டத்தில் உள்ள, 1.5 லட்சம் வீடுகளின் சுவற்றில், ' நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் பொருள் வாங்குகிறேன்' என, மஞ்சள் நிற கலரில் சிவப்பு எழுத்துகளால் எழுதப்பட்டு உள்ளது. இது அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தவுசா மாவட்டத்தில் உள்ள பான்க்ரீ கிராமத்தை சேர்ந்த சீதாராம் என்பவர் கூறுகையில், '' முன்பு எங்களுக்கு கோதுமை கிடைக்காது. எங்கள் வீட்டு சுவற்றில் எழுதிய பிறகு, ரேஷன் பொருட்களை வாங்க தொடங்கி உள்ளோம். ஆனால், கிராம மக்கள் எங்களை பார்த்து சிரிக்கின்றனர்,'' என்றார்.

    அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 65 வயது சோனி தேவி கூறுகையில்,'' எனக்கு, 15 கிலோ கோதுமை கிடைக்கிறது. எனவே தான் என் வீட்டு சுவற்றில் எழுத அனுமதித்தேன். ஆனால், பலரும் இப்போது அது பற்றி கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அவமானமாக உள்ளது. நாங்கள் ஏழை தான். இப்போது கோமாளியாகி விட்டோம்,'' என்றார்.
    Next Story
    ×