search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கேசானந்தா
    X
    கங்கேசானந்தா

    மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாருடன் கற்பழிப்பு புகார் கூறிய சட்ட மாணவி சந்திப்பு - வழக்கில் குழப்பம்

    கேரளாவில் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சாமியாரை அவர்மீது கற்பழிப்பு புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி சந்தித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த கங்கேசானந்தா சாமியார் பக்தர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் குறைகளை தீர்க்க பரிகார பூஜைகள் நடத்தி வந்தார்.

    திருவனந்தபுரம் பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவரின் நோயை தீர்க்க பூஜை செய்ய சென்றபோது அந்த பெண்ணின் மகளான சட்டக்கல்லூரி மாணவியை கங்கேசானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த மாணவி அந்த சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

    தற்போது அந்த சாமியார் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையில் சட்டக் கல்லுரி மாணவி முதலில் சாமியாரின் மர்ம உறுப்பை அவரே துண்டித்ததாக கூறினார். அதன்பிறகு திடீர் பல்டியடித்து தனது காதலன் அய்யப்பதாசுக்கும், சாமியாருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் காதலனும் அவரது நண்பர்களும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டதாக கூறினார்.

    அதன்பிறகு அதையும் மாற்றி போலீசார் தூண்டுதலின் பேரில் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார். மாணவியின் முன்னுக்குபின் முரணான வாக்குமூலம் காரணமாக இந்த வழக்கு விசாரணையில் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவி திடீரென்று தனது தாயுடன் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சாமியார் கங்கேசானந்தாவை சந்தித்தார். போலீசார் முன்னிலையில் 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. அதன் பிறகு அங்கிருந்து அழுதுகொண்டே பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அந்த மாணவி சென்றார்.

    பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி ஒரு பரபரப்பு புகார் மனுவை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது காதலன் அய்யப்ப தாஸ் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று கற்பழித்தார். மேலும் அவர் என்னையும், சாமியார் கங்கேசானந்தாவையும் மிரட்டி பணம் பறித்தார். அவர்தான் சாமியாரின் மர்ம உறுப்பையும் துண்டித்தார். மேலும் எனது காதலன் அய்யப்பதாஸ் என்மீது கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். நான் எனது தாயாருடன் பாதுகாப்பாகத் தான் இருக்கிறேன். என்னை கற்பழித்த அய்யப்பதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சாமியார் கங்கேசானந்தா திருவனந்தபுரம் சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் சட்ட மாணவி முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை கொடுத்து வருவதால் இந்த வழக்கை திசைதிருப்ப முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார். எனவே சட்டக்கல்லூரி மாணவியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும். சாமியாருக்கு ஜாமீன் வழங்ககூடாது என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு சாமியார் கங்கேசானந்தா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சட்டக் கல்லூரி மாணவியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் உத்தரவிட்டது. நாளை (22-ந்தேதி) சட்டக்கல்லூரி மாணவியை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.




    Next Story
    ×