search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி: கேரளாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 23 வாலிபர்கள் மீது வழக்கு
    X

    கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி: கேரளாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 23 வாலிபர்கள் மீது வழக்கு

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கேரளா வாலிபர்கள் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். பாகிஸ்தானின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    ஆனால் இந்தியாவில் உள்ள சில வாலிபர்கள் பாகிஸ்தானின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கேரள மாநிலம் காசர் கோடு பாடியதுடுக்கா பகுதியில் சில வாலிபர்கள் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அப்பகுதி பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ்ஷெட்டி, பாடியதுடுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பிய வாலிபர்கள் ரசாக், மசூத், சிராஜ் உள்பட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மத துவே‌ஷத்தை ஏற்படுத்துவது, பிரிவினையை தூண்டுவது, கலகம் செய்ய முயல்வது போன்ற பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல பெங்களூரை அடுத்த கூர்க் பகுதியிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாலிபர்கள் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கூர்க் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதானவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை யென்றும், இவர்களை பற்றி விசாரித்து வருவதாகவும் கூர்க் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×