search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: எல்லையில் எட்டு நாட்களுக்கு பின்னர் ஓய்ந்த துப்பாக்கி சண்டை
    X

    காஷ்மீர்: எல்லையில் எட்டு நாட்களுக்கு பின்னர் ஓய்ந்த துப்பாக்கி சண்டை

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த எட்டு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் படைகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை இன்று ஓய்ந்துள்ளதால் அங்கு அமைதி நிலவுகிறது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த எட்டு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் படைகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை இன்று ஓய்ந்துள்ளதால் அங்கு அமைதி நிலவுகிறது.

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பூஞ்ச், ரஜோரி, நவுஷேரா மாவட்டங்களில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10-ம் தேதி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு தக்க பதிலடி தாக்குதல் அளிக்க இந்திய ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டனர்.

    எல்லையில் பதற்றநிலை நிலவியதால் அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். இம்மாத தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் 17 முறை அத்துமீறி தாக்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 6 முறை இந்திய நிலைகளை தாக்கியுள்ளனர்.

    பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ வீரரும், 7 பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எட்டு நாட்களுக்கு பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் எல்லையில் எந்த தாக்குதலும் நிகழவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.

    பல நாட்களுக்கு பிறகு அங்கு அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×