search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையை ஏற்படுத்திய இடதுசாரி எம்.எல்.ஏ
    X

    கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையை ஏற்படுத்திய இடதுசாரி எம்.எல்.ஏ

    கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ அருணன் பங்கேற்றது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ அருணன் பங்கேற்றது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள ஊராக்கம் என்ற பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் முன்னாள் சேவர்களின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், ஆச்சரியப்படும் வகையில் அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு நேர் எதிராக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ அருணன் பங்கேற்றுள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் இடதுசாரி எம்.எல்.ஏ. ஒருவர் பங்கேற்ற செய்தி வெளியே தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பால்ராம் இந்த செய்தி மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விமர்சித்திருந்தார். அதன் பின்னரே, ஊடகங்களில் இந்த செய்தி கசிந்தது.

    இது குறித்து அருணனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “அந்த நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என முன்னரே தெரியாது. தெரிந்திருந்தால் நான் எப்படி சென்றிருப்பேன். கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்று தான் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் அங்கு சென்ற போதுதான் எனக்கு தெரியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் வந்திருந்தார்கள் அதனால் அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் அளித்துவிட்டு உடனே வெளியேறிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு விளக்கமளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×