search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் காவல் 12-ந் தேதி வரை நீடிப்பு
    X

    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் காவல் 12-ந் தேதி வரை நீடிப்பு

    இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு ஜூன் 12-ந் தேதி வரை காவலை நீடித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இருவரும் ஜாமீன் கேட்டு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இருவரது காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.


    அவர்களது காவலை வருகிற ஜூன் 12-ந் தேதி வரை மேலும் நீடித்து நீதிபதி உத்தரவிட்டாரர். இதனால் தினகரன் தொடர்ந்து திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் டி.டி.வி. தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜூனா காவலும் ஜூன் 12-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×