search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பி.எஸ்.அணி சார்பில் 20 லட்சம் பக்க ஆவணம் தாக்கல்
    X

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பி.எஸ்.அணி சார்பில் 20 லட்சம் பக்க ஆவணம் தாக்கல்

    இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் தேர்தல் கமி‌ஷனில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது 20 லட்சம் பக்கங்களை கொண்டு இருந்தது.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 2 அணிகளாக செயல்படுவதால் தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தையும் கட்சி பெயரையும் முடக்கியது. இதையடுத்து இரு அணிகளும் தேர்தல் கமி‌ஷனில் தங்கள் பக்கம் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அம்மா அணியினரும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியினரும் இரு கட்டமாக ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.


    இந்த நிலையில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் தேர்தல் கமி‌ஷனில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது 20 லட்சம் பக்கங்களை கொண்டு இருந்தது.

    ஏற்கனவே ஓ.பி.எஸ். அணி சார்பில் 1½ லட்சம் பக்க ஆவணங்கள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×