search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் கனமழை: பல்வேறு விபத்துக்களில் 23 பேர் பலி
    X

    பீகாரில் கனமழை: பல்வேறு விபத்துக்களில் 23 பேர் பலி

    நாட்டின் பிற பகுதிகளில் வெயில் வாட்டிவதைக்கும் நிலையில், பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பாட்னா:

    நாட்டின் பல மாநிலங்களில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் 11 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

    மழையின் போது ஏற்பட்ட சாலை விபத்துக்கள், மின்னல் மற்றும் இடி தாக்கிய விபத்துக்களில் இது வரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

    வானிலை மையத்தின் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. புயலாக மாறியுள்ள இந்த தாழ்வுமையத்திற்கு மோரா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால், வங்கக்கடலோரம் உள்ள பகுதிகள் உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
    Next Story
    ×