search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சகோதரத்துவம் ஓங்கி வளரட்டும்: பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து
    X

    சகோதரத்துவம் ஓங்கி வளரட்டும்: பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

    ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், சகோதரத்துவம் ஓங்கி வளரட்டும் என்று இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்கள் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள். ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். 

    இந்தாண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் தென்படாததால், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் நோன்பைத் தொடங்கியுள்ளனர். 

    ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், சகோதரத்துவம் ஓங்கி வளரட்டும் என்று இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    மோடி தனது டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில், ”ரம்ஜான் நோன்பு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். புனிதமான இந்த ரம்ஜான் மாதத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×