search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை: மழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    X

    இலங்கை: மழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    இலங்கையில் பெய்து வரும் பலத்த மழை, மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மலைப் பிரதேச மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கீலனி ஆறு மற்றும் காலு கங்காவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை 90க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 



    மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

    மேலும் மீட்பு பொருட்களுடன் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவி்துள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் கப்பல்  காலை கொழும்பு சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது கப்பல் ஞாயிற்று கிழமை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக 1970களில் பெய்த கனமழையில் சுமார் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 110 பேர் மாயமாகினர் என அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×