search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை
    X

    நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை

    நாடு முழுவதும் எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைமையிலான் ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் பெரும்பாலும் மாட்டிறைச்சி தடை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் பசு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

    இந்நிலையில், நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கால்நடைகள் விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி, விவசாயிகள் மட்டும் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும். மாட்டுச் சந்தை கமிட்டியும் மாடு விற்பனை செய்வது இறைச்சிக்காக அல்ல, விவசாய தேவைக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மிருக வதைக்கு எதிராக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×