search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசுத் தலைவர் போட்டியில் நான் இல்லை - பிரனாப் முகர்ஜி
    X

    குடியரசுத் தலைவர் போட்டியில் நான் இல்லை - பிரனாப் முகர்ஜி

    எதிர்க்கட்சியின் சார்பில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்க இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    எதிர்க்கட்சியின் சார்பில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்க இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

    குடியரசு தலைவராக உள்ள பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் குடியரசு தலைவராக பதவியேற்ற இவர், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில், குடியரசு தலைவர் தேர்தல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் பத்திரிக்கை தொடர்பு செயலாளர் வேணு ராஜாமணிக்கு பிரிவு உபச்சார விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

    அப்போது பேசிய பிரணாப் முகர்ஜி, ‘மீண்டும் ராஷ்டிரபதி பவனுக்கு திரும்பும் போட்டியில் பங்கேற்கும் எண்ணமில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. ஜூலை 25ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் மாளிகையில் பொறுப்பேற்க உள்ளார். என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை, அவர்கள் சார்ந்த அமைச்சர்களுக்கும் துறைகளுக்கும் திரும்ப அனுப்புகிறேன்’ என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×