search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் அமைதி நிலவ பாக். ராணுவ அதிகாரிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
    X

    எல்லையில் அமைதி நிலவ பாக். ராணுவ அதிகாரிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

    சமீப காலமாக எல்லைப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், மீண்டும் அமைதியை ஏற்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டர் நிலை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    ஸ்ரீநகர்:

    சமீப காலமாக எல்லைப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், மீண்டும் அமைதியை ஏற்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டர் நிலை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமானது பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தினர்.

    இந்தியாவின் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகளையும் ராணுவம் வெளியிட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் இதை மறுத்து வந்தது. இந்நிலையில், எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டு ராணுவத்தினரின் கமாண்டர் நிலை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பிலும் பல்வேறு விசயங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அதோடு, எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி செயல்படவும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×