search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
    X

    ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விமானத்தில் செல்ல டிக்கெட் விலை ரூ.12 முதல் தொடங்கும் என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமானது தனது 12-ம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கட்டண சலுகையை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட்  விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.12 முதல் ஆரம்பிக்கும் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான். வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டுக்கும் பொருந்தும்.

    இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சலுகையின் கீழ் குறைந்த அளவிலான இருக்கைகளே விமானத்தில் இருக்கும். முதலில் வருபர்களுக்கே சலுகை கிடைக்கும்.



    இந்த டிக்கெட் விற்பனை இன்று (மே 23) தொடங்கி மே 28 வரை செய்யப்பட உள்ளது. இந்த சலுகை விலை டிக்கெட் மூலம் ஜூன் 26 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை விமானத்தில் பயணிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஆண்டுவிழா சலுகை விற்பனையை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×