search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீண்டாமையை கடைபிடிக்கும் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா: தலித் இளைஞர் போலீசில் புகார்
    X

    தீண்டாமையை கடைபிடிக்கும் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா: தலித் இளைஞர் போலீசில் புகார்

    கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா மீது தீண்டாமையை கடைபிடிப்பதாக தலித் இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பெங்களூர்:

    கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது தீண்டாமையை கடைபிடிப்பதாக தலித் இளைஞர் ஒருவர் மாண்டியா மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் தமது புகாரில், “சித்ரதுர்கா மாவட்டம் கேலகோடே பகுதியில் உள்ள ஒரு தலித் குடும்பத்திற்கு எடியூரப்பா வருகை தந்திருந்தார். அப்போது ஊடகங்கள் முன்னிலையில் தலித் குடும்பத்துடன் மதிய உணவு அருந்தினார். 

    எடியூரப்பா அருந்திய உணவு தலித் குடும்பத்தினரால் தயார் செய்தது அல்ல. ஹோட்டலில் இருந்து வாங்கி வந்தது. பா.ஜ.க. தலைவரின் இந்த செயல் சமூகத்திற்கு தவறான முன் உதாரணத்தை அளித்துவிடும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.



    எடியூரப்பா மீதான இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக் எடியூரப்பாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் எடியூரப்பா மீதான குற்றச்சாடு முற்றிலும் அரசியல் உந்துதல் காரணமாக எழுப்பப்பட்டுள்ளது என்று கர்நாடக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களது பலத்தை இழந்து வரும் நிலையில் அதனை ஈடுகட்டுவதற்கு இது போன்ற கற்பனை குற்றச்சாட்டுகளை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
    Next Story
    ×