search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட கேரள சாமியார் மீது ரூ.40 லட்சம் மோசடி புகார்: மாணவி வாக்குமூலம்
    X

    பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட கேரள சாமியார் மீது ரூ.40 லட்சம் மோசடி புகார்: மாணவி வாக்குமூலம்

    பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட கேரள சாமியார் தனது தாயாரிடம் ரூ.40 லட்சம் பணத்தை பல தவணைகளாக பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி என்ற கங்கேசானந்த தீர்த்தபாத சுவாமிகள் (வயது 54).

    கொல்லம் அருகே உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்தபோது இவரை திருவனந்தபுரம் கண்ண மூலை என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி வந்து சந்தித்தனர்.

    அந்த பெண்ணின் கணவருக்கு நீண்டகாலமாக உடல்நலக்குறைவு இருந்து வருவதால் அந்த சாமியாரை அவருக்கு சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டதால் அவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்துவந்தார்.

    அப்போது அந்த சாமியாருக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கடந்த பல வருடங்களாக நீடித்தது. மேலும் அந்த பெண்ணின் மகளுக்கும் சாமியார் செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    14 வயது இருந்த போது நடந்த இந்த செக்ஸ் கொடுமை 23 வயது வரை தொடர்ந்தது. தற்போது அவர் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

    சாமியாரின் கொடுமையை பொறுத்துக் கொள்ளமுடியாத அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை சாமியார் கற்பழித்தபோது கத்தியால் அவரது பிறப்பு உறுப்பை வெட்டி துண்டித்து விட்டார். மாணவியின் இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியார் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துண்டிக்கப்பட்ட அவரது பிறப்பு உறுப்பை ஆபரே‌ஷன் மூலம் இணைக்க முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த சாமியாரிடம் விசாரணை நடத்தினார். மேலும் அவரது காவலை ஜூன் 3-ந்தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். சாமியாரின் உடல்நிலை சீரான பிறகு அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார். மேலும் சாமியாரை தனி ‘செல்’லில் அடைக்க அனுமதி கேட்ட போலீசாரின் கோரிக்கையை மாஜிஸ்திரேட் ஏற்கவில்லை.

    மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி மாஜிஸ்திரேட்டிடமும், போலீசாரிடமும் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தில் 9 ஆண்டுகளாக சாமியார் தனக்கு செய்த பாலியல் கொடுமைகளை அந்த மாணவி விவரமாக தெரிவித்துள்ளார். மேலும் சாமியார் தனது தாயாரிடம் ரூ.40 லட்சம் பணத்தை பல தவணைகளாக பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி மாணவி வழக்கை விசாரித்து வரும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கூறும்போது சாமியார் மீதான பணம் மோசடி புகார் பற்றி அந்த மாணவியின் தாயார் இதுவரை எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அவர் புகார் கொடுத்தால்தான் இதுபற்றி விசாரிக்க முடியும். மேலும் சாமியாரிடம் கற்பழிப்பு புகார் பற்றி விசாரிக்கை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அவரது உடல்நிலை அதற்கு தகுதியானதாக இல்லாததால் தற்போது விசாரணை நடத்த முடியவில்லை என்று கூறி னார்.

    இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்பெர்ஷின் குமார் கூறும்போது பண மோசடி பற்றி அந்த பெண் புகாரை மனுவாக கொடுக்கவில்லை. இருந்தாலும் கற்பழிப்பு புகாருடன் இந்த பண மோசடி பற்றியும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றார்.

    இந்த நிலையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் கும்மனம் ராஜசேகரனும் கற்பழிப்பு சாமியாரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்ட புகைப்படம் பேஸ்-புக், வாட்ஸ்-அப்களில் வேகமாக பரவிவருகிறது.

    சாமியாருடன் கும்மனம் ராஜசேகரனுக்கு தொடர்பு இருப்பது போன்ற வாசகங்களும் அதில் இடம்பெற்று இருந்தன. இதுபற்றி கும்மனம் ராஜசேகரன் கூறும்போது அந்த சாமியாரை எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு எங்கள் கட்சியுடன் எந்த தொடர்பும் கிடையாது. சன்னியாசிகள் மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்ட போது அவரும் அதில் பங்கேற்று பேசினார். அந்த படம்தான் வாட்ஸ்-அப்களில் தற்போது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்றார்.

    கற்பழிப்பு புகாரில் சிக்கி உள்ள சாமியார் பரிகார பூஜைகள் செய்ய செல்லும்போது புல்லட்டில் தான் செல்வார். இதனால் அவரை புல்லட் சாமியார் என்று பக்தர்கள் அவரை அழைத்து வந்துள்ளனர். தற்போது கற்பழிப்பு புகாருடன் பண மோசடி புகாரும் கூறப்பட்டுள்ளதால் சாமியாருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.


     * * * கங்கேசானந்த தீர்த்தபாத சுவாமிகள்

    Next Story
    ×