search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் டிரைவர் இல்லாத பஸ்களை இயக்க திட்டம்: முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
    X

    ஆந்திராவில் டிரைவர் இல்லாத பஸ்களை இயக்க திட்டம்: முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு

    முதல் கட்டமாக அமராவதி முதல் தலைமை செயலகம் வரை டிரைவர் இல்லாத எலக்ட்ரிக் பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    நகரி:

    ஆந்திரா மாநிலம் வெல்கம் டிடியில் உள்ள தற்காலிக தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நகர வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் 160 ஏக்கரில் தலைமை செயலகமும், சட்டப் பேரவை கூடமும் அமைக்கப்படுகிறது. இதில் 20 ஏக்கரில் கட்டிடங்களும், மீதமுள்ள 140 ஏக்கரில் புளு அன்ட்கிரீன் அடிப்படையில் தண்ணீர், செடிகள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அமராவதி தலைநகருக்காக சிங்கப்பூர் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவமைப்பை வருகிற 22-ந் தேதி சமர்ப்பிக்க உள்ளனர். இதுவரை 90 சதவீத டிசைனிங் பணிகள் முடிந்துள்ளன.

    அமராவதி தலைநகர் நமது சம்பிரதாயம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும். சர்வதேச அளவில் புதிய தொழில் நுட்பத்துடன் போக்கு வரத்து சேவையும் அங்கு அமைக்கப்படுகிறது.

    முதல் கட்டமாக அமராவதி முதல் தலைமை செயலகம் வரை டிரைவர் இல்லாத எலக்ட்ரிக் பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.


    மேலும் பஸ், ரெயில் என்று ஒரே டிக்கெட் பெற்றுக் கொண்டு எந்த மார்க்கத்திலும் பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    ஒரு நகரத்துக்கு மேம்பாலங்கள் மிக முக்கியமானது. எனவே இங்கு உலகத் தரத்தில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். இந்த மேம்பாலங்கள் கலாச்சாரம் நிறைந்திருக்கும் வகையில் கட்டப்படும். மேலும் சோலார் மின்சாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×