search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: ராணுவ சிறப்பு அதிகார சட்டம் வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ போர்க்கொடி
    X

    கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: ராணுவ சிறப்பு அதிகார சட்டம் வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ போர்க்கொடி

    கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவதை தொடர்ந்து அங்கு ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது34). இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு அருகே முட்டம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, பின்னால் வந்த ஒரு சொகுசு கார் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வினர் இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.



    இந்நிலையில், அம்மாநில ஆளுநர் சதாசிவத்தை இன்று சந்தித்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது குறித்து முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், கண்ணூர் மாவட்டத்தை பதற்றமான பகுதியாக அறிவித்து, அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×