search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமி‌ஷனிடம் ஓ.பி.எஸ். அணி 12,600 பக்க பிரமாண பத்திரம் தாக்கல்
    X

    தேர்தல் கமி‌ஷனிடம் ஓ.பி.எஸ். அணி 12,600 பக்க பிரமாண பத்திரம் தாக்கல்

    ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏற்கனவே 20,000 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 12,600 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தேர்தல் கமி‌ஷன் முன் தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    கட்சி பிளவுக்குப் பின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்ததால் இரு அணி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் இருவருமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் இதில் உரிய முடிவு எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு கால அவகாசம் இல்லை என்று கூறி சின்னமும், கட்சி பெயரும் முடக்கப்பட்டது.

    சசிகலா ஆதரவாளர்கள் தங்கள் கட்சிக்கு அ.தி.மு.க. அம்மா கட்சி என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்கள் கட்சிக்கு அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி என்றும் பெயரைத் தேர்வு செய்தனர். அ.தி.மு.க. அம்மா கட்சிக்கு தொப்பி சின்னமும், அ.தி.மு.க. புரட் சித்தலைவி அம்மா கட்சிக்கு மின் விளக்கு கம்பமும் ஒதுக்கப்பட்டது.

    அ.தி.மு.க. பெயர், இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்கள் தேர்தல் கமி‌ஷன் முன் விசாரணையில் உள்ளது. இரு அணியினரும் தங்கள் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை அவர்களிடம் கையெழுத்து பெற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். பல ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக உள்ளது.


    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏற்கனவே 20,000 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 12,600 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தேர்தல் கமி‌ஷன் முன் தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் ஓ.பி.எஸ். அணியை ஆதரிக்கும் நிர்வாகிகள் தொண்டர்களின் கையெழுத்துடன் புதிய ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து வருகிறது.
    Next Story
    ×