search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் குரல் மாதிரியை பரிசோதிக்க கோரி மனு: டெல்லி கோர்ட்டில் போலீஸ் முறையீடு
    X

    தினகரன் குரல் மாதிரியை பரிசோதிக்க கோரி மனு: டெல்லி கோர்ட்டில் போலீஸ் முறையீடு

    தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனின் குரல் மாதிரியை பரிசோதிக்கக் கோரி டெல்லி கோர்ட்டில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவரை சென்னை கொண்டு வந்தனர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் டெல்லி தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


    இந்த நிலையில் தினகரன், சுகேசை டெல்லி போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, தினகரன்- சுகேஷ் இடையே நடந்த டெலிபோன் உரையாடல் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இந்த இருவரது குரல் மாதிரியை பரிசோதிக்க அனுமதிக்க கோரி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    தினகரன் வக்கீல் கால அவகாசம் கேட்டதால் இந்த வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×